பணியிலிருந்து நீக்கியதால் நிறுவனத்தின் முக்கிய கோப்பைகளை ஹேக் செய்து அழித்த முன்னாள் ஊழியர்! பறந்து வந்து பிடித்துச் சென்ற சிங்கப்பூர் போலீஸ்!
பணியிலிருந்து நீக்கியதால் நிறுவனத்தில் முக்கிய கோப்பைகள் ஹேக் செய்த முன்னாள் ஊழியரை கைது செய்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022ம் ஆண்டு அக்டோபர் வரை இந்தியரான கண்டுளா நாகராஜு (39) சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனத்தில் அவர் சரியாக பணிபுரியாததால், அவரை நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். பணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், இந்தியாவுக்குத் திரும்ப முடிவு செய்தார். அதன்படி, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு திரும்பினார்.
இதையடுத்து, தன்னை பணியில் இருந்து நீக்கியதால் ஆத்திரமடைந்த அவர், அந்த நிறுவனத்தின் முக்கியமான கோப்பைகளை திருட முடிவு செய்தார். அதன்படி, தனது கணினி மூலம் அந்த நிறுவனத்தின் முக்கிய கோப்பைகளை ஹேக் செய்ய முயற்சி செய்தார்.
இதையும் படியுங்கள் : குவைத் தீ விபத்து | வெளிநாடுவாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை சார்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டம்!
நிறுவனத்தின் கணினியை ஹேக் செய்த அவர், 180 முக்கிய கோப்பைகளை அழித்துள்ளார். இதனை அறிந்த நிறுவனத்தின் முதலாளி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
இதையடுத்து, காவல்துறையினரின் விசாரணையில் நிறுவனத்தின் கணினியை ஹேக் செய்தது, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர், கண்டுளா நாகராஜு என்பது தெரிய வந்தது. அவரை இந்திய சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் சிங்கப்பூர் சைபர் கிரைம் காவல்துறை கைது செய்தது. மேலும், அந்த முன்னாள் ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.