For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும் - காலிஸ்தான் ஆதரவு அமைப்பு அறிவிப்பு!

கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பு எஸ்எஃப்ஜே அமைப்பு அறிவித்துள்ளது
04:45 PM Sep 17, 2025 IST | Web Editor
கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பு எஸ்எஃப்ஜே அமைப்பு அறிவித்துள்ளது
கனடாவில் இந்திய தூதரகம் முற்றுகையிடப்படும்   காலிஸ்தான் ஆதரவு அமைப்பு அறிவிப்பு
Advertisement

அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி குழுவான சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு (Sikhs for Justice (SFJ)  கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் அவ்வமைப்பு செப்டம்பர் 18 (வியாழக்கிழமை) அன்று துணைத் தூதரகத்தைக் கைப்பற்ற போவதாகவும் அதனால்  அன்றைய தேதியில் தூதரகத்திற்கு செல்ல இருப்போர் வேறு நாளை தேர்ந்தெடுக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது.

Advertisement

தொடர்ந்து புதிய இந்திய உயர் ஆணையர் தினேஷ் பட்நாயக்கின் முகத்தில் இலக்கைக் காட்டும் படத்துடன் கூடிய சுவரொட்டியையும் அந்தக் குழு வெளியிட்டுள்ளது.

கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த 2023-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாட்டு உரவில் விரிசல்கள் விழுந்தன.

இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கு பிறகும் கனடாவில் இருக்கும் இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் இயக்கனத்தினரை உளவு பார்ப்பதாக எஸ்எஃப்ஜே குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement