For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘இந்திய சினிமாவின் செல்லக்குழந்தை’... கமலைப் புகழ்ந்த நானி!

02:10 PM Aug 30, 2024 IST | Web Editor
‘இந்திய சினிமாவின் செல்லக்குழந்தை’    கமலைப் புகழ்ந்த நானி
Advertisement

இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே அதிகம் கொண்டாடப்பட்ட செல்லக் குழந்தை என்றால் அது கமல்ஹாசன் தான் என நடிகர் நானி தெரிவித்துள்ளார்.

Advertisement

நானி நடிப்பில் தெலுங்கில் நேற்று வெளியான திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. 'அந்தே சுந்தரானிகி' திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் தான் ‘சரிபோதா சனிவாரம்’. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. இதில் நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்திற்கான நேர்காணல் ஒன்றில் நடிகர் நானி பங்கேற்றார். அப்போது சினிமாவில் அவரை ஊக்கப்படுத்திய நடிகர் குறித்து கேட்டபோது, அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசனை கூறினார்.

கமல் குறித்து நானி பேசியதாவது;

நான் கமல் சாரின் நடிப்புக்காக மட்டும் ரசிகர் ஆகவில்லை. சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் திரைக்கதை, மேக்கப், நடனம் என அனைத்திலும் அவர்தான் அரசன். தான் சம்பாதித்த அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்தவர். 5 வயது முதல் சினிமாவில் நடிக்கிறார். சினிமாவை தாண்டி அவர் செய்த முதல் விசயம் அரசியல். என்னைப்

பொருத்தவரையில் இந்திய சினிமாவின் வரலாற்றிலேயே அதிகம் கொண்டாடப்பட்ட செல்லக் குழந்தை என்றால் அது கமல்ஹாசன் மட்டுமே. கமலின் அனைத்து படங்களும், எனக்கு மிகவும் பிடிக்கும். அதில், நாயகன் திரைப்படம் மிகவும் பிடிக்கும் என்றார்.

Tags :
Advertisement