For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும் - ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்!

இந்தியர்களை சேர்க்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவை  இந்தியா வலியுறுத்தியுள்ளது.
03:04 PM Sep 11, 2025 IST | Web Editor
இந்தியர்களை சேர்க்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவை  இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்   ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்
Advertisement

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக  போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.

Advertisement

இந்த நிலையில்  ரஷ்ய ராணுவமானது ரஷ்ய வாழ் வெளிநாட்டு இளைஞர்களை பல்வேறு சலுகைகள தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவத்தில் இணைத்ததாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. மேலும் இந்தியாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறையானது, இந்தியர்களை சேர்க்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யாவை  வலியுறுத்தியுள்ளது.  ரஷ்ய ஆயுதப் படைகளில் தற்போது பணியாற்றி வரும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இது இது தொடர்பான ஊடங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

”சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. கடந்த ஒரு வருடமாக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் இந்த நடவடிக்கையில் உள்ள ஆபத்துகளை சுட்டிக்காட்டி, அதன்படி இந்திய குடிமக்களை எச்சரித்துள்ளது. டெல்லி மற்றும் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளிடமும் இந்த விஷயத்தை எடுத்துரைத்து, இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

ரஷ்ய ராணுவத்தில் சேருவதற்கான  சலுகைகளிலிருந்தும் விலகி இருக்குமாறு அனைத்து ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை நாங்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம், ஏனெனில் இது ஆபத்து நிறைந்ததாகும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement