" பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மோடி அரசு உறுதி" - மத்திய அமைச்சர் அமித்ஷா!
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு 2024 இன்று நடைபெற உள்ளது. இந்த 2 நாள் மாநாட்டில் எதிர்கால பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகள், இந்தியாவுக்கு வெளியே செயல்படும் பயங்கரவாத குழுக்களை சர்வதேச அரசுகளின் உதவியுடன் எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : RainAlert | பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
இந்த நிலையில், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன், பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது. இன்று தொடங்கும் 2 நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, பாரதத்தின் பாதுகாப்பு கோட்டையை வலுப்படுத்தும் அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தும். மாநாட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.