For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை" - சபாநாயகர் அப்பாவு!

ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
06:58 AM Sep 06, 2025 IST | Web Editor
ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
 குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை    சபாநாயகர் அப்பாவு
Advertisement

நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தில் அய்யா வைகுண்டர் குறித்து அவதூறாக மொழிபெயர்ப்பு செய்தது வன்மையாக கண்டிக்கதக்கது. தமிழக முதல்வர் வந்ததும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டியில் மாற்றம் செய்துள்ளது மாநில அரசுக்கும் மக்களுக்கும் நன்மை அளிப்பது அல்ல மாறாக மத்திய அரசுக்கு நன்மை பயக்கும்.

Advertisement

ராணுவத்தை தவிர மத்திய அரசுக்கு எந்த செலவும் இல்லை. ரஷ்யாவில் இருந்து குரூட் ஆயில் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு எந்த லாபமும் இல்லை. மாறாக முகேஷ் அம்பானிக்குத்தான் லாபம். 2014 ஆம் ஆண்டு 135 ரூபாய்க்கு குரூட் ஆயில் வாங்கிய போது பெட்ரோலின் விலை 65 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு 65 ரூபாய்க்கு குரூட் ஆயில் வாங்கி 100 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்கின்றனர். ரஷ்யாவில் வாங்கும் குரூட் ஆயிலை சுத்திகரிப்பு செய்து அமெரிக்காவுக்கு அனுப்புவதை பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபரும் ஒத்துக் கொண்டுள்ளனர். 726 பில்லியன் யூரோவிற்கு வருடத்திற்கு முகேஷ் அம்பானி ஏற்றுமதி செய்கிறார்.

நயாரா 124 பில்லியன் யூரோவுக்கு ஏற்றுமதி செய்கிறார். பருத்தி ஆடைகள் பின்னல் ஆடைகள் இவற்றால் திருப்பூர் கொங்கு மண்டலத்தில் மிக அதிகமான வேலை வாய்ப்பை கொடுக்கிறது. வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்வதில் 50 சதவீதம் அந்த பகுதியில் இருந்து செல்கிறது. கிழக்கு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றில் இருந்து ஜவுளி பின்னல் ஆடை ரெடிமேடு துணிகளை இறக்குமதி செய்தால் 12 சதவீதம் வரி உள்ளது.

ஆனால் அந்த வரியை நீக்கி உள்ளனர். அந்த வரியை நீக்கியதால் தமிழகத்தில் உற்பத்தி செலவு அதிகமாகிறது. ஹசீனா பிரதமராக இருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அதானியை அழைத்துச் சென்று அங்குள்ள இரண்டு துறைமுகத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை வாங்கி கொடுத்துள்ளார். அதற்குப் பதில் 12 சதவீதம் இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் வெளிநாடுக்கு சென்று கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக முதலீடுகளை பெற்றுள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அனைத்து அதிகாரிகளும் ஈடுபட்டு வரும் நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு அதிகாரிகள் மீண்டும் பணிக்கு வந்ததும் உடனடி தீர்வு காணப்படும் என தெரிவித்தார். பெரும்பாலான மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகள் காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஓடையில் வீசி சென்றதாக கூறப்படும் மனுக்கள் வைத்து எதுவும் செய்ய முடியாது. அந்த மனுக்கள் ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு விட்டது. அது தேவையற்ற மனு. வேண்டும் என்று சிலர் அதனை தண்ணீரில் வீசி சென்றுள்ளனர். இதனால் மனு கொடுத்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை அனைத்து மனுக்களும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களது மனுக்கள் மீது நடவடிக்கை இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement