For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சிங்கப்பூருடனான நட்பை இந்தியா கொண்டாடுகிறது” - பிரதமர் #NarendraModi பதிவு!

09:07 AM Sep 05, 2024 IST | Web Editor
“சிங்கப்பூருடனான நட்பை இந்தியா கொண்டாடுகிறது”   பிரதமர்  narendramodi பதிவு
Advertisement

அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி சிங்கப்பூருடனான நட்புறவை இந்தியா கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமர் மோடி புருனே, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பயணத்தின் முதற்கட்டமாக நேற்று முன்தினம் புருனே சென்றடைந்த அவர், அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் நேற்று சந்தித்து பேசினார்.

இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையில், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் மருந்துகள், திறன் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததோடு, பரஸ்பர பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இசை, நடனம் என சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் மோடிக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், தனது சிங்கப்பூர் பயணம் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது;

https://twitter.com/narendramodi/status/1831341775707152785

"எனது நண்பர், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. பலதரப்பட்ட விஷயங்களில் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளோம். சிங்கப்பூருடனான நட்புறவை இந்தியா கொண்டாடுகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement