இந்தியா - வங்கதேசம் இடையேயான ரயில் மற்றும் விமான சேவை ரத்து!
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட ரயில் சேவை மற்றும் விமான சேவையை இந்திய அரசு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவையை ரத்து செய்யப்படுவதாக இந்தியா ரயில்வே இன்று அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து டாக்காவிற்கு செல்லும் கொல்கத்தா மைத்ரி விரைவு ரயில் கடந்த ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே முன்னதாக அறிவித்து இருந்தது.
இதையும் படியுங்கள் : வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்தார் ஷேக் ஹசீனா!
அதேபோல, வங்கதேசத்தில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து டாக்காவுக்கும், டாக்காவில் இருந்து இந்தியாவுக்கும் இயக்க திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேச நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், முன்பதிவு பயணிகளின் கட்டணம் திரும்பி அளிக்கப்படும் அல்லது பயணத் தேதி மாற்ற அனுமதிக்கப்படும் என்று எக்ஸ் தளத்தில் ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
IMPORTANT UPDATE
In view of the emerging situation in Bangladesh, we have cancelled the scheduled operation of our flights to and from Dhaka with immediate effect. We are continuously monitoring the situation and are extending support to our passengers with confirmed bookings…
— Air India (@airindia) August 5, 2024