For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#T20W | இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

06:44 AM Oct 14, 2024 IST | Web Editor
 t20w   இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
Advertisement

இந்திய அணிக்கு எதிரான 'டி-20' மகளிர் உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் நேற்று (அக். 13) இரவு சார்ஜாவில் நடைபெறும் தனது 4வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் தகிலா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனே 2 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஜார்ஜியா வராஹம் டக் அவுட் ஆனார். பின்னர் கிரேஸ் ஹாரிஸ், தஹிலா மெக்ராத் இருவரும் சிறப்பாக விளையாடினர். கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், தஹிலா மெக்ராத் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெரி 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 152 ரன்கள் இலக்குடன் இந்தியா விளையாடியது. முதலில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய ஷபாலி வர்மா 20 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்களும் எடுத்தனர். பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா விளையாடினர். தீப்தி சர்மா29 ரன்களின் ஆட்டமிழிந்தார். இதையடுத்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 44 பந்துகளில் அரைசதம் விளாசினார். பூஜா 9 ரன்களில் வெளியேறினார். அருந்ததி (0), ஸ்ரேயங்கா (0), ராதா யாதவ் (0) ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மேலும் இந்தத் தொடரில் முதல் அணியாக ஆஸ்திரேலியா மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement