துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சென்னை வருகை!
நாட்டின் 17 வது துணைக் குடியரசு தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இந்த நிலையில் இருவரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பு கட்சியினரையும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளரான சுதர்சன ரெட்டி இன்று தமிழகம் வந்தடைந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை வந்த அவரை சென்னை விமான நிலையத்தில் திமுக சார்பில் ஆ.ராசா, திருச்சி சிவா, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் சார்பில் செல்வ பெருந்தகை உள்பட பலர் வரவேற்றனர்.
தொடர்ந்து சுதர்சன ரெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.