For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்... கடைசி இருக்கையில் #RahulGandhi!

03:02 PM Aug 15, 2024 IST | Web Editor
செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்    கடைசி இருக்கையில்  rahulgandhi
Advertisement
செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து 2வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து இணையவாசிகள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
78-ஆவது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டைக்கு வருகை புரிந்தார். அவரை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி, உரையாற்றினார். இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.
பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு முன்வரிசையில் மத்திய அமைச்சர்களுக்கு சமமாக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்திக்கு இப்படி முன்வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement

ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இந்த முறை முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை. முன்வரிசை இடங்கள் மத்திய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு நடுவில்தான் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடைசியில் இருந்து இரண்டாவது வரிசையில் அமர்ந்திருக்கும் ராகுல் காந்தியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்திக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்படாதது குறித்து இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Tags :
Advertisement