For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

IND vs SA : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

01:55 PM Nov 05, 2023 IST | Web Editor
ind vs sa   டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
Advertisement

தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடரின் 37வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடிய 7 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை என்று வரிசையாக போட்டு தாக்கிய இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளை பதம் பார்த்த தென் ஆப்பிரிக்கா தனது 3-வது லீக் ஆட்டத்தில் இலக்கை விரட்டுகையில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்தியாவின் ஆதிக்கத்துக்கு அணை போட்டு புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க தென் ஆப்பிரிக்க அணி தீவிரமாக முயலும். வலுவான பேட்டிங், பந்து வீச்சை கொண்ட இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தைக் காண ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச உள்ளது.

Tags :
Advertisement