For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாணவர்களிடம் அதிகரிக்கும் மனஅழுத்தம்? - உதவி எண்களுக்கு குவியும் அழைப்புகள்... அதிர்ச்சி தகவல்!

10:53 AM Feb 29, 2024 IST | Web Editor
மாணவர்களிடம் அதிகரிக்கும் மனஅழுத்தம்    உதவி எண்களுக்கு குவியும் அழைப்புகள்    அதிர்ச்சி தகவல்
Advertisement

தேர்வு குறித்த மன அழுத்ததை சரி செய்ய பள்ளிக்கல்வித் துறை அறிமுகப்படுத்திய உதவி எண்ணை தொடர்பு கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 55%  உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

பொது தேர்வு நடைபெறும் காலகட்டத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பானது.  நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற பெற்றோர்களின் அழுத்தமும், மறுபக்கம் கேள்வித் தாள் எப்படி வருமோ என்ற கவலை மற்றும் மேற்படிப்பு குறித்த கவலை உள்ளிட்டவை தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இயல்பாகவே மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும். மேலும், சில மாணவர்களுக்கு தோல்வி பயம் கூடுதல் மன அழுத்தத்தை கொடுக்கிறது.

தேர்வு காலங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பெருகிய அழுத்தத்தைத் தணிக்கும் முயற்சியில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்தியது.'14417' என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களது மன அழுத்தம் குறித்து ஆலோசகர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றன.

இதையும் படியுங்கள் : ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் - மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி!

இது குறித்து அதன் துறை தலைவர் ஷில்பி சுக்லா கூறியதாவது :

"தேர்வுகள் என்பது மன அழுத்தத்திற்கு உட்பட அல்லது பயப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இந்த நடவடிக்கை மாணவர்களிடையே தேர்வு மன அழுத்தம் மற்றும் மேற்படிப்பு குறித்த கவலைகளை தணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பெரும்பாலும்  12 முதல் 16 வயதுக்குள் இருக்கும் மாணவர்கள்  இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு பொது தேர்வு குறித்து  திட்டமிட இயலாமை,  தேர்வு முடிவு குறித்த கவலை,  அதிகரித்து வரும் பெற்றோரின் அழுத்தம் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதலுக்கான கோரிக்கைகள் ஆகியவற்றை புகாராக மாணவர்கள் தங்களிடம் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மாணவர்களிடமிருந்து வரும் ஒவ்வொரு அழைப்பிற்கும் குறைந்தது 20 நிமிடங்கள் செலவிட்டு வருகிறோம்.

தேர்வில் தேர்ச்சி பெறாததால் ஆசிரியர்களால் வகுப்பறையில் அவமானப் படுத்தியதாகவும், சில சமயங்களில், சகா மாணவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பேசுவதாகவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுவதாகவும், இந்த நிலை அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்"
இவ்வாறு அதன் துறை தலைவர் ஷில்பி சுக்லா தெரிவித்தார்.

கடந்த  ஜனவரி மாதத்தில் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிட்ட  '14417' என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை  9,000 ஆக இருந்தது. ஆனால், பிப்ரவரி மாதத்ததில் 55 அதிகரித்து 14,000 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Advertisement