8-ல் ஒரு குழந்தைக்கு ஆட்டிஸம் பாதிப்பு - மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
2 முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளில் 8 -nd ஒருவருக்கு ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு உள்ளிட்ட நரம்புசார் நோய்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் குழந்தைகளுக்கான நரம்பு சார்ந்த பாதிப்புகள் குறித்த மருத்துவப் முகாம் நேற்று நடைபெற்றது. கேர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ் அமைப்பு மற்றும் அண்ணா பல்கலைக்கழக மருத்துவ மின்னணுவியல் மையம் சார்பில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : இமாலய இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா – 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி அசத்தல்!
குழந்தைகளுக்கான நரம்பு சார்ந்த பாதிப்புகள் குறித்த மருத்துவப் முகாமில் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். மருத்துவ நிபுணர்கள், துறை சார் வல்லுநர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மருத்துவ நிபுணர்கள், துறை சார் வல்லுநர்கள் பல்வேறு அமர்வுகளில் உரையாற்றினர். இந்த முகாமில் பெற்றோர், குழந்தையை பராமரிப்பாளர்கள் பங்கேற்று அத்தகைய பாதிப்புடைய குழந்தைகளை கையாளுவது குறித்து தெளிவான விளக்கங்களைப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் விருதகிரிநாதன் பேசியதாவது :
"இரண்டிலிருந்து ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவருக்கு ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, கவனக் குறைபாடு போன்ற நரம்புசார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம். அதைக் கருத்தில் கொண்டே இந்த முகாம் நடத்தப்பட்டது."
இவ்வாறு டாக்டர் விருதகிரிநாதன் தெரிவித்தார்.