அதிகரித்த போர் பதற்றம் - PSL தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் UAE-க்கு மாற்றம்!
பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது, பதிலுக்கு பாகிஸ்தானும் இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இடையே பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தாக்குதல் நடந்ததாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் கராச்சிக்கு மாற்றப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள 8 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ உள்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் போட்டிகளை பார்க்க முடியாது என்பது வருத்தத்திற்குரியது.
அரசியலையும் விளையாட்டும் வெவ்வேறு என்ற முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவாகவுள்ளது. ஆனால் இந்தியாவில் பொறுப்பற்ற செயலால் பாதுகாப்பு கருதி ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு மீதமுள்ள போட்டிகள் மாற்றப்படுகிறது. இதனால் எங்கள் விலைமதிப்பற்ற உள் மற்றும் வெளிநாடு கிரிக்கெட் வீரர்கள் காப்பாற்றப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். ஏற்கெனவே டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் போட்டிகள் இடம் மாற்றப்பட்டிருப்பது மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.