வீரியமடைந்த போர் பதற்றம் - சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வீரியமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கைகளை இரு நாடுகளும் முன்னெடுத்து வருகிறது, குறிப்பாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டய கணக்காளருக்கான சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று(மே.09) தொடங்கி மே 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியப் பட்டயக் கணக்காளர் கழகம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
இதுகுறித்து இணைச் செயலாளர் ஆனந்த்குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பட்டயக் கணக்காளர்கள் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.icai.org வலைதளத்தில் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.