செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரித்து 440 கன அடியாக உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 – 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை உயர்த்த அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியின் இருந்து ஏற்கனவே 25 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில் 3120 மில்லியன் இருப்பு உள்ளது. ஏரியின் நீர்மட்டம் 24 அடியில் 22 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.