For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இபிஎஸ் ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

09:13 PM Oct 23, 2024 IST | Web Editor
இபிஎஸ் ஆதரவாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
Advertisement

இபிஎஸ் ஆதரவாளர் சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (23.102024) சோதனை மேற்கொண்டனர்.

Advertisement

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான இளங்கோவன், வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு சொந்தமான திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல், தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களின் இடங்களில் இருவேறு துறைகளின் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement