அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்குச் சொந்தமான புதிய இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடந்து அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டது.
இதையும் படியுங்கள் : அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? - ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!
இந்நிலையில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் புதிய பங்களா ஒன்றை கட்டி வருகிறார். அங்கு இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்யும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.