For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இபிஎஸ் உறவினர் வீட்டில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

08:02 AM Jan 09, 2025 IST | Web Editor
இபிஎஸ் உறவினர் வீட்டில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
Advertisement

ஈரோட்டில் N.R கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. 

Advertisement

ஈரோடு செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறவினரான ராமலிங்கம் என்பவரது N.R கன்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனத்தில், மூன்றாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஈரோடு ரகுநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஆர்பிபி கட்டுமான நிறுவன உரிமையாளர் செல்வ சுந்தரத்தின் வீடு, அலுவலகம் மற்றும் முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகம் ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Tags :
Advertisement