Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழகத்தில் 90% குற்றம் மது போதையில் தான் நடக்கிறது” -சீமான்!

03:31 PM Apr 09, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகத்தில் 90 சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது என நாம்
தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

Advertisement

ஈரோடு பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்மேகனை ஆதரித்து
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஈரோடு வீரப்பன் சத்திரம்
பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:  

தமிழ் பேரின மக்களிடையே தொடர்ந்து அநீதி,  முறையற்ற லஞ்சம்,  ஊழல்,  இயற்கை சுரண்டல் ஆகியவை நடைபெற்று தொடர்ச்சியாகச் சகித்துக் கொள்வதன் மூலம் அடிமை
இனம் உருவாகி வருகிறது.  தெரு தெருவாக வாக்கு சேகரித்து வருகிறோம்.  ஆனால் மற்ற கட்சிகள் இரண்டு நாளில் தேர்தலுக்கு முன்பு வீட்டு வீட்டுக்குச் சென்று வாக்குக்குக் காசு கொடுக்கிறார்கள்.  இதனை மக்கள் புறக்கணிக்கும் போது தான் தமிழ் மக்கள் வாழ்க்கை உயரும்.

படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவருக்கும் அரசு வேலை என்பது தான் நாம் தமிழர்
கட்சி கொள்கை.  பட்டு வளர்ப்பு,  கால்நடை வளர்ப்பு,  மீன் பிடிப்பு போன்ற வேளாண்மை பணிகள் அரசு பணிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.  இந்தியாவில் 28சதவீதம் பேர் இரவு உணவு இல்லாமல் தூங்க செல்கிறார்கள்.  நாம் தமிழர் கட்சி கொள்கைகளை கேரள அரசு பின்பற்றி வருகிறது.  மனித உடல் திறனை உற்பத்தியில் முழுமையாக ஈடுப்படுத்தும் நாடு தான் வளரும்.

உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்குக் காசு கொடுத்து கூட்டம் வரவழைக்கப்பட்டு வருகிறது.
3வது அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி வந்ததுக்கு மக்களாகிய உங்கள் ஆதரவு
தான்.  எதற்கு பாஜக வாக்களிக்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லுங்கள் பார்ப்போம்.  தமிழ்நாடு என்று பெயர் உள்ளது ஆனால் தமிழில் எந்த பெயரும் இல்லை.

நாம் தமிழ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மது கடைகள் மூடி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.  தமிழ் நிலம் பறிபோய் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் மற்ற மாநிலத்தவர்கள் வேலை செய்வது தவறு இல்லை.  குடியுரிமை வழங்குவதைத் தான் எதிர்க்கிறோம்.

காங்கிரஸ், பாஜக அதிமுக திமுக ஆகிய கட்சிகள் தான் மக்கள் நிலை இந்த நிலைமை
உள்ளது.  மாற்று என்று மட்டுமே மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
ஆனால் மாற்றத்தை முழுமையாகத் தேடுவதில்லை.  அதிலும் அதிமுக மாற்று திமுக காங்கிரஸ் மாற்று பாஜக என்று மட்டுமே மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே இருந்தால் மக்கள் வாழ்க்கை நிலை இப்படி தான் இருக்கும் மாற்ற முடியாது.

தமிழகத்தில் 90சதவீதம் குற்றம் மது போதையில் தான் நடக்கின்றது.  அதானி துறைமுகத்தில் 1 லட்தத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை
பொருட்கள் பிடிபட்டது, எ ன்ன செய்தீர்கள்?., ஏ ன் ஜாபர் சாதிக் அமீர் ஆகியோர்
மீது நடவடிக்கை எடுக்கிறது?...  ஏன் என்றால் அவர்கள் சிறுபான்மையினராக
இருப்பதால் நடவடிக்கை எடுக்கிறது. ஏ ன் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

உலகத்தில் மாட்டுக்கறி 76 லட்சம் டன் எடை வரை இந்தியா முஸ்லீம் நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்கிறது.  மதம்,  சாதி,  கடவுளைப் பற்றிச் சிந்திப்பவன் மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை.  தேர்தலுக்காக ராமர் கோவில் அவசர கதியில் திறக்கப்பட்டது.

1976ம் ஆண்டு காலத்தில் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு மீட்பது இப்போது சொல்வது
தேர்தல் அரசியல்.  கச்சத்தீவு விவகாரம் அண்ணாமலை மூலம் பேசுவது தேர்தல் அரசியல்.
தேசியத்தின் உரிமை பிரச்சினையான கச்சத்தீவு பிரச்சினை குறித்து இத்தனை ஆண்டு
பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்து கொண்டேன் என பிரதமர் சொல்வது கேவலமான விஷயம்.

குலதெய்வ கோவிலில் கூட தமிழில் மந்திரம் சொலவது போய்,  சமஸ்கிருத மொழி வந்து
விட்டது.  அடுத்தவர் மொழி நமக்கு அறிவு ஆகாது என்று உணர வேண்டும்.  சீமான் சிவப்பாக இருந்து இருந்தால் நான் தான் பிரதமராக இருப்பேன்.  சமூகத்தினை சீர்படுத்த தன்னலமற்ற சர்வாதிகார ஆட்சி முறை கொண்டு வரவேண்டும்.  இந்த தேர்தலில் ஒரே ஒருமுறை மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
Elections2024naam tamilar katchiNTKSeeman
Advertisement
Next Article