Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“குறைந்த விலையில் மதுபானம் இல்லையென்றால் கடையை மூடு” - விற்பனையாளர்களிடம் அட்டகாசம் செய்யும் மதுப்பிரியர்கள்!

09:00 PM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் மதுபானம் பற்றாக்குறையால் மதுப்பிரியர்களுக்கும், மதுபான விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் எற்ப்பட்டு வருகிறது.

Advertisement

மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை, புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் திருநகர், சோழவந்தான், வாடிப்பட்டி, பரவை, சமயநல்லூர் போன்ற பகுதிகளில் ஏராளமான தனியார் மற்றும் அரசு மதுபான கடைகள் இயங்கி வருகின்றன.

கப்பலூர் மதுபான குடோன், மணலூர் மதுபான குடோன் என்ற இந்த இரு குடோன்களில் இருந்தே மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு என அனைத்து மதுபான கடைகளுக்கும், மதுபானம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே டாஸ்மாக் கடைகளை கணினிமயமாக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த ஒரு வாரமாக மது பாட்டில்களில் (QR) கோடு முறை அமல்படுத்துவதாக கூறி பழைய பாட்டில்களை விற்க சொல்லி, குடோனில் இருந்து மதுபான கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகளில் மதுபான தட்டுப்பாடு உருவாகியுள்ளது. குறைந்த விலை மது பாட்டில்கள் விற்று தீர்ந்த நிலையில், அதிக விலை மது பாட்டில்கள் மட்டுமே இருப்பில் உள்ளது. அதிலும் ஃபுல் மற்றும் ஆப் என 500 முதல் 1000 ரூபாய் விலை மதிப்பு கொண்ட மதுபானங்கள் மட்டுமே இருப்பதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

இதனால் அன்றாட கூலி வேலைக்கு செல்பவர்கள், மாலை நேரங்களில் குறைந்த விலை மதுபான
வாங்க முடியாமல் அரசு மற்றும் தனியார் மதுபான விற்பனையாளர்களிடம், நாங்கள் எவ்வாறு அவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும்?, குறைந்த விலை மது பாட்டில் இல்லை என்றால் கடையை இழுத்து மூடு என வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில்,

பக்கத்தில் உள்ள மதுபான கடைக்கு மதுபானம் வாங்க வந்தேன். ஆனால் குறைந்த விலை மதுபானம் இல்லை எனக் கூறுகிறார்கள். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு வரவேண்டிய சரக்கு இன்னும் வரவில்லை. மேலும் எங்களிடம் அதிகமாக பணம் கேட்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்ற மதுவை வைத்து விற்பனை செய்கிறோம். என விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கனவே பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் விலை ஏற்றினார்கள். தற்போது மீண்டும் விலை ஏற்றுவதற்காக இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. மக்களை குடிக்கு பழக்கி விட்டார்கள். குடிக்கு பழக்கிவிட்டு குடிக்க வரும்போது, இவ்வாறு செய்தால் நாங்கள் என்ன செய்வது? இந்த ஆயத்தீர்வை துறை அமைச்சர் என்ன செய்கிறார்?

150 ரூபாய் குவாட்டர் வாங்கி குடிக்கும் நாங்கள் 400 ரூபாய் கொடுத்து எவ்வாறு வாங்க முடியும்? இதையெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளாதா? இதனால் மதுப்பிரியர்கள் ஆன எங்களுக்கும் மதுபான கடை விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கின்றனர்.

மதுரையில் கடந்த சில நாட்களாக மதுபான விற்பனையாளர்கள் மது பிரியர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமலும், மது பிரியர்கள் மது கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமலும் புலம்பும் நிலை உருவாகியுள்ளது.

 

Tags :
alcoholDrinksMadurai
Advertisement
Next Article