மத்தியப்பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விபத்து! - 9 குழந்தைகள் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது திடீரென கோயில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இந்நிலையில், கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த இடிபாடுகளில் சிக்கி 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பாழடைந்த சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகளை உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.