ஆந்திராவில் இடைவிடாது பெய்யும் அடை மழை: திருப்பதி சென்றுள்ள பக்தர்கள் அவதி!
ஆந்திராவில் ராயல சீமா, கோஷ்டா ஆகிய பகுதிகளில் அடைமழை பெய்து வருவதால் திருப்பதி மலைக்கு சென்றுள்ள பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின்
ராயல சீமா, கோஷ்டா ஆகிய பகுதிகளில் இன்று (நவ.29) காலை முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருப்பதி மலைக்கு சென்றுள்ள பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு செல்லவும், கடைவீதிகள் ஆகியவற்றுக்கு செல்லவும் மக்கள் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.