For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டியே" -தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சு

2026-ல் திமுக - தவெக இடையில் தான் போட்டி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
03:09 PM Mar 28, 2025 IST | Web Editor
 2026 ல் இரண்டு பேருக்கு  இடையேதான் போட்டியே   தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது,

Advertisement

"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாUம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.

காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்னைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்தும் இவர்கள் நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகளைம் தாண்டி தொண்டர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துக்கொண்டு தான் இருக்கும்.

பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும். மத்தியில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு, நீங்கள் செய்வது மட்டும் என்ன? அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அதே பாசிச ஆட்சிதானே. ஒரு கட்சி தலைவராக ஜனநாயக முறைப்படி என் கட்சி தொண்டர்களையும், என் நாட்டு மக்களையும் பார்ப்பதற்கும், சந்திப்பதற்கும் தடை போடுவதற்கு நீங்கள் யார்? தடையை மீறி தொண்டர்களை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாள் போயே தீருவேன்.

சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவரெல்லாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார், அது நடக்காது என்றெல்லாம் சொல்கிறீர்கள். பிறகு எதற்கு எந்த கட்சிக்கும் கொடுக்காத நெருக்கடியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொடுக்கிறீர்கள்? அணைபோட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால், சாதாரண காற்று சூறாவளியாய் மாறும், சக்திமிக்க புயலாகக்கூட மாறும்.

தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தினமும் மக்களை சென்று பாருங்கள், அவர்களிடம் பேசுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களுடைய பிரச்னை என்னவென்று கேளுங்கள். அதை தீர்ப்பதற்கு என்ன வழி என்று யோசியுங்கள். அப்போதுதான் நம்மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும், அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்துவிட்டு நிமிர்ந்து பாருங்கள், ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாய் பறக்கும்.

தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டுப் பெண்கள்தான் உங்களுடைய அரசியலுக்கு, ஆட்சிக்கு முடிவுகட்டப் போகிறார்கள். பெண்களின் வாழ்க்கை தான் போராட்டமாக இருக்கிறது என்று பார்த்தால் இங்கே எத்தனை போராட்டங்கள்? பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் தொழிலாளர்கள், டங்ஸ்டன், மின்கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம், இஸ்லாமிய அமைப்புகள், செவிலியர்கள், மருத்துவர்கள் போராட்டம், இந்த எல்லா போராட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும்.

தமிழ்நாட்டிலிருந்து தரும் ஜிஎஸ்டியை வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவதில்லை. படிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு நிதி ஒதுக்குவதில்லை. ஆனால் மும்மொழிக் கொள்கையை திணிக்கிறீர்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் ஆரம்பித்தபோதே புரிந்துவிட்டது. தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமா Handle பண்ணுங்க சார், ஏன்னா தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டுன ஸ்டேட், பாத்து சார். பாத்து செய்யுங்க மறந்துடாதீங்க சார். 2026-ல் இரண்டு பேர் இடையே தான் போட்டியே, ஒன்னு TVK இன்னொன்னு DMK. வெற்றி நிச்சயம்."

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

Tags :
Advertisement