For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் ரஜினிகாந்த்-ன் 171-ஆவது படத்தின் தலைப்பு குறித்து வெளியானது புதிய அப்டேட்!

08:53 PM Apr 20, 2024 IST | Web Editor
நடிகர் ரஜினிகாந்த் ன் 171 ஆவது படத்தின் தலைப்பு குறித்து வெளியானது புதிய அப்டேட்
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 வது படத்தின் தலைப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.  படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  இதற்கு அனிருத் இசையமைக்கிறார்.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

லோகேஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ரஜினியின் 171-வது படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அதே நேரம்,  பான் இந்திய திரைப்படமாக இது உருவாகும் என்பதால்,  படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் மோகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த நிலையில், இந்த படத்தின் தலைப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement