For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவு!

10:09 PM May 30, 2024 IST | Web Editor
தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்  அதிகபட்சமாக திருத்தணியில் 108 5 டிகிரி வெப்பம் பதிவு
Advertisement

தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.

Advertisement

ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள் திருத்தணி - 108.5, மீனம்பாக்கம் - 107, வேலூர் - 107, மதுரை விமான நிலையம் - 104, நுங்கம்பாக்கம் - 104, பரங்கிப்பேட்டை - 104, மதுரை நகரம் - 104, புதுச்சேரி - 104, ஈரோடு - 104, நாகப்பட்டினம் - 103, கடலூர் - 103, திருச்சி - 102, தஞ்சாவூர் - 102, தொண்டி - 101, திருப்பத்தூர் - 101, காரைக்கால் - 101, கரூர் பரமத்தி - 100, தூத்துக்குடி - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:- குன்னூர் - 76.64, கொடைக்கானல் - 71.6, ஊட்டி - 72, வால்பாறை - 78 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Tags :
Advertisement