For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன்" - தோனியின் பழைய பதிவு இணையத்தில் வைரல்!

12:59 PM Apr 01, 2024 IST | Web Editor
 நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன்    தோனியின் பழைய பதிவு இணையத்தில் வைரல்
Advertisement

நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன் என்ற மகேந்திர சிங் தோனியின் பழைய பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement

ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.  ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது.  இந்த போட்டியில்  டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள் : போக்குவரத்து நெரிசலின் போது UPSC தேர்வுக்கு படித்த சொமேட்டோ ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த தொடரின் முதல் வெற்றியை டெல்லி அணியும்,  முதல் தோல்வியை சென்னை அணியும் பதிவு செய்தன.  இருப்பினும்,  இந்த ஆட்டத்தில் இரு சிறப்பு வாய்ந்த சம்பவம் அரங்கேறின.  விபத்தில் இருந்து உடல் நலம் பெற்று வந்து மீண்டும் விளையாட தொடங்கியுள்ள டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

இதையடுத்து மற்றொரு  சிறப்பு வாய்ந்த சம்பவம் மகேந்திர சிங் தோனி,  தான் தொடக்க காலத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலுடனும்,  அதே வேகத்துடனும் களத்தில் அதிரடியாக ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த இரண்டு போட்டிகளில் தோனியின் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை,  தனது அதிரடி விளையாட்டு மூலம் மகிழ்ச்சியடைய செய்தார். நேற்றைய ஆட்டத்தில் 8-வது வீரராக களமிறங்கி தோனி,  3 சிக்ஸர்கள்,  4 பவுண்டரிகள் விளாசி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.  அதிரடி ஆட்டக்காரருக்கான 'எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர்' விருது தோனிக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு 'X' தளத்தில் தோனி வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

"யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல.  நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன்."  என்று தோனி பதிவிட்டிருந்தார்.

Tags :
Advertisement