For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிலவில் தரையிறங்கிய ஒடிஸியஸ் லேண்டரின் சிக்னல் கிடைக்கவில்லை! - நாசா தகவல்

08:25 AM Feb 23, 2024 IST | Web Editor
நிலவில் தரையிறங்கிய ஒடிஸியஸ் லேண்டரின் சிக்னல் கிடைக்கவில்லை    நாசா தகவல்
Advertisement

 IM - 1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

Advertisement

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த இன்டியூடிவ் மிஷின்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட IM - 1 விண்கலத்தின் ஒடிஸியஸ் லேண்டர் பிப்.15-ம் தேதி அதிகாலை 1:05 மணியளவில் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து SpaceX Falcon 9 ராக்கெடின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, பிப்.21-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை ஒடிஸியஸ் லேண்டர் அடைந்தது. இதன்மூலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இன்டியூடிவ் மிஷின்ஸ் படைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை – 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

பிப்.21-ம் தேதி மாலை 06.23 மணியளவில் ஒடிஸியஸ் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக நாசா நிறுவனம் தகவல் தெரிவித்தது. ஆறு கால்களை கொண்ட ஒடிஸியஸ் லேண்டர்,  ‘நோவா- சி’ என்ற வகையைக் சார்ந்தது. 1972 ஆம் ஆண்டு நாசாவின் அப்போலோ 17 நிலவை எட்டிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் தரையிங்கிய முதல் அமெரிக்க விண்கலம் என்ற சாதனையை IM - 1 விண்கலம் பெற்றுள்ளது.இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட ஒடிஸியஸ் லேண்டரிடமிருந்து சிக்னல் கிடைத்து வந்த நிலையில், தற்போது சிக்னல் சரிவர கிடைக்கவில்லை என நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்டியூடிவ் மிஷின்ஸ் இயக்குனர் டிம் கிரெய்ன், “IM - 1 விண்கலத்தின் ஒடிசியஸ் லேண்டர் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. சில தொழில்நுட்பக் குறைபாடு காரணத்தால் லேண்டரில் இருந்து பெறக்கூடிய சிக்னல் பலவீனமாக உள்ளது. அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து குழு ஆய்வு செய்து வருகிறது" என்று தெரிவித்தார்.

நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நாசாவின் ஒடிஸியஸ் லேண்டர் தரையிறங்கியுள்ளது. சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 2023-ல் நிலவின் மேற்பரப்பை பாதுகாப்பாக அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement