சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டு விற்பனை - தந்தை, மகன் கைது..!
ஈரோடு அருகே பேன்சி ஸ்டோரில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட லக்ஸ்மன் ராம் என்பவர் அவரது
குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் சாலையில்
வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் பேன்சி ஸ்டோரில் நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்கள் ; உலகின் முதல்முறையாக 12K தரத்தில் தயாராகியுள்ள கமல்ஹாசனின் “ஹேராம்” திரைப்படம்!
இந்த நிலையில், சட்டவிரோதமாக கஞ்சா கலந்த சாக்லெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட கடையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது, கஞ்சா கலந்த 17 சாக்லேட்டுகளை கைப்பறிய போலீசார், லக்ஸ்மன் ராம் மற்றும் அவரது மகன் சங்கர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.