சட்டவிரோத குடியேற்றம் | வைரலாகும் விவேக் ராமசாமியின் பேச்சு!
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக சில தீர்வுகளை விவேக் ராமசாமி தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பை எதிர்த்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி போட்டியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரதான எதிர்க் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 37) உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருந்தது நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலகுவதாக விவேக் ராமசாமி திடீரென அறிவித்தார். இந்த நிலையில், விவேக் ராமசாமி அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக சில தீர்வுகளை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், "சட்டப்பூர்வமாக குடியேறியவர்களின் குழந்தையாக நான் இதைச் சொல்கிறேன். நமது எல்லையை பாதுகாக்க நமது ராணுவத்தை பயன்படுத்துங்கள். சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை நிறுத்துங்கள்" என்று தெரிவித்தார். அவரின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.