டெல்லியில் சட்டவிரோத குடியேற்றம் - 3 நைஜீரியர்கள் கைது!
வங்காளதேசம், மியான்மர், ஆப்பிரிக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் புது டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தவர் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கடந்த ஜீன் மாதம் வங்கதேசத்தினர் 41 பேர், மியான்மரின் ரோஹிங்கியா மக்கள் 17 பேர், நைஜீரியா நாட்டினர் 13 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை போல் புதுடெல்லியில் சட்டவிரோதமாக சட்டவிரோதமாக வசித்து வரும் வெளி நாட்டினரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆப்பிரிகாவின் நைஜீரியாவை நாட்டை சேர்ந்த 3 பேர் விசா காலம் முடிந்தும் தலைநகர் டெல்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்துள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டினர் பதிவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் டெல்லி போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டெல்லி தவார்கா பகுதியில் தங்கி இருந்த கொஷ்னியன் மைக்கில், விக்டர், ஜிபொ அடிப்ஜா ஆகிய 3 நைஜீரியர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட மூவரையும் நைஜீரியாவுக்கு திரும்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.