Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது” - நடிகை வழக்கில் ஆஜராவது குறித்து சீமான் பேட்டி!

வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது என நடிகை விஜயலட்சுமி வழக்கில் ஆஜராவது குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
05:53 PM Feb 27, 2025 IST | Web Editor
Advertisement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் திருமண மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார். அதன் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீமான் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஜராகாமல் இருந்ததால் வளசரவாக்கம் போலீசார், அவர் வீட்டு வாசலில் உள்ள கேட்டில் நாளை(பிப்.28) ஆஜராக வேண்மென்று அவர் வீட்டு சம்மன் ஒட்டியுள்ளனர்.

Advertisement

வீமான் வீட்டு காவலாளி ஒருவர் அந்த சம்மனை கிழிக்க, இது குறித்து அங்கு காவல்துறையினர் விசாரிக்க சென்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட காவலாளி போலீசாரிடம் துப்பாக்கியை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட காவலாளிகள் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சீமான் வீட்டில் முன்பு நாதக கட்சி நிர்வாகிகள் குவியத் தொடங்கினர்.

இந்த நிலையில் இந்த வழக்கில்  விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ என் மீது தீவிரம் காட்டும் போலிசார் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களில் தீவிரம் காட்டாதது ஏன்? என்னை கைது செய்ய அவசியம் என்ன? நான் வருவதாக கூறி விட்டேன்.  நான் வருவேன் என்ற பிறகும் ஏன் இப்படி செய்ய வேண்டும். இதற்கு ஆட்சியும், ஆட்சியாளர்களும் தான் வெட்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட பெண்ணையும் என்னையும் ஒரே இடத்தில் அமர வைத்து விசாரிக்கட்டும். என்னை என்ன செய்ய நினைக்கிறீர்கள் இதற்கு அஞ்சி பயப்பட மாட்டேன். நான் வருவேன் வந்தே ஆக வேண்டுமென்றால் வர முடியாது அதிமுக ஆட்சியில் வராத விஜயலட்சுமி, திமுக ஆட்சியில் ஏன் வருகிறார்?

பெரியார் விவகாரத்தில் என்னை சமாளிக்க முடியாமல், விஜயலட்சுமியை வைத்து முயற்சிக்கிறார்கள். அந்த பெண்ணை அழைத்து குற்றத்திற்கு சான்றை கேட்க வேண்டும். இந்த நாடகத்தை பார்க்கதான் போகிறேன் நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம், விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்”

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
NTKPoliceSeemanVijayaLakshmi
Advertisement
Next Article