Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ராமர் பெயரில் ஏமாற்றினால், தெய்வம் சும்மா இருக்காது’ - கே.பி.முனுசாமி பேட்டி

02:14 PM Jan 27, 2024 IST | Web Editor
Advertisement

ராமர் பெயரில் அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், ராமர் பெயரில் ஏமாற்றினால், அதற்குரிய தண்டனையை அவர் வழங்குவார் என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

கிருஷ்ணகிரி புறநகர் கிளை பணிமனையில் அண்ணா தொழிற்சங்க அலுவலக கட்டிடத்தை அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

“கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை துவங்கி விட்டோம். அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்படும். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால், அதிமுக தொண்டர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளாவார்கள். தமிழகத்தில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்தபின் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும். அப்பொழுது அண்ணாமலை அதை உணர்வார்.

தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என அண்ணாமலை தெரிவிக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் போது அவர் படிக்கின்ற மாணவராக இருந்திருப்பார். தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர் வரலாற்றை பிழையோடு கூறக்கூடாது. 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வட மாநிலத்தில் தான் இருந்தது. தென் மாநிலத்தில் கிடையாது. ஜெயலலிதா தான் பாஜகவை தென் மாநிலத்திற்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தார்.

வாஜ்பாய், அத்வானி இருவரையும் அழைத்து வந்து சென்னை மெரினாவில் மிகப்பெரிய கூட்டணி மாநாடு நடத்தியவர் ஜெயலலிதா. வடமாநிலத்தில் மட்டும் இருந்த பாஜகவை தென் மாநிலங்களுக்கு அறிமுகப்படுத்தியது அதிமுக. தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியவர் ஜெயலலிதா. ஆனால் தமிழ்நாட்டிற்கான உரிமையை தராததால் அந்த கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேறினார். அந்தக் கட்டிடம் நாங்கள் கட்டிக் கொடுத்தது. அந்த அமைப்பு நாங்கள் உருவாக்கியது என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை பாஜகவை முன்னிலைப்படுத்தி பேசவில்லை. அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார். தலைசிறந்த தலைவர் நரேந்திர மோடி எனக்கூறி அவரின் நற்பெயரை சம்பாதிக்க அண்ணாமலை முயற்சி செய்கிறார். அண்ணாமலைக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை. வாஜ்பாயை வாழ்த்தி தான் நரேந்திர மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும். ஆனால் அண்ணாமலை மோடியை உருவாக்கிய வாஜ்பாய் பற்றி பேசுவதில்லை.

வாஜ்பாய் மறக்கடிக்கப்படுகிறாரா அல்லது மறந்துவிடுகிறார்களா? அண்ணாமலை அவர் கட்சியினுடைய தலைவர்களை கலங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரதமர் இதை அறிந்து அவருடைய பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கும்போது அவர் வெட்டப்பட்டு இருக்கிறார். ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு யாரோ ஒரு சக்தி அதை தடுத்துள்ளது. மற்றவர்களுக்காக ஆட்சி செய்வதால் தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிப்பால் அமைதி இல்லாத தமிழ்நாடாக உள்ளது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

ராமர் அனைவருக்கும் தெய்வம். அந்த தெய்வத்தை வைத்து யாராவது ஏமாற்றினால், அந்த தெய்வம் சும்மா இருக்காது. பின்பு அதற்குரிய தண்டனையை அந்த ராமபிரான் வழங்குவார்.”

இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Tags :
ADMKAnnamalaiBJPDeputy General Securitykp munusamyramarRamar Temple
Advertisement
Next Article