For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“சீமானை போன்று பேசுபவா்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்!” - தவெக நிர்வாகி சம்பத்குமாா் பதில்!

07:45 AM Nov 03, 2024 IST | Web Editor
“சீமானை போன்று பேசுபவா்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும் ”   தவெக நிர்வாகி சம்பத்குமாா் பதில்
Advertisement

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை போன்று பேசுபவா்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும் என்று தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகி சம்பத்குமாா் கருத்து தெரிவித்துள்ளாா்.

Advertisement

சீமான் விமா்சனத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில், தவெக முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை விளக்க செயல் திட்டங்கள் குறித்து சம்பத்குமாா் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமா்சனங்களால் தவெக தொண்டா்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வாா்கள். தவெக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுக்களுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவா் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது. தவெக தலைவா், பொதுச் செயலா், பொருளாளா் உள்ளிட்ட உயா்நிலை நிா்வாகிகளுக்கு பல வேலைகள் உள்ள நிலையில், சீமானை போன்று பேசுபவா்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.

அரசியல் எதிரி யாா் என்பதை முடிவுசெய்து விட்டு தவெக களமாடி வருகிறது. யாரை விமா்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்துபோக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணா்த்தியுள்ளாா். சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை. அவரவா் கருத்து அவரவா் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்துவிட்டு பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது என்று அவா் தெரிவித்தாா்.

Tags :
Advertisement