மக்களவைத் தேர்தலில் போட்டியா? அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
கட்சி தலைமை அறிவித்தால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை தேர்தலில் களம் இறக்க பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் தேதியை இந்த மாதத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வதற்காக நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், நரேந்திர மோடி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலின் Background என்ன? தாத்தா பெயர் மற்றும் அப்பா பெயர் வைத்து அரசியலுக்கு வந்தவர். அவர்கள் பெயரை தூக்கி விட்டால் உதயநிதி இரண்டு ஓட்டு கூட வாங்க மாட்டார்” என தெரிவித்தார்.