"INDIA கூட்டணி வென்றால் கோடிக்கணக்கான ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்!" - ராகுல் காந்தி உறுதி
INDIA கூட்டணிக்கு வாக்களித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வந்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களை லட்சாதிபதியாக்குவோம், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்குவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (07.05.2024)தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
சாய்பாஸா பகுதியில் உள்ள டாடா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் பேசிய எம்.பி. ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் ஜோபா மஞ்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,
பழங்குடியினர், ஏழைகள், பின்தங்கியவர்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கான தேர்தலாகும் இது. அரசியலமைப்பையே பாஜக அழிக்க நினைக்கிறது என்றும் ராகுல் கூறினார்.
நமது நாட்டின் நீர், நிலம், காடு என அனைத்தையும் 14 - 15 தொழிலதிபர்களுக்கே வழங்கிவிட வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இடஒதுக்கீட்டை 50 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்துவோம். ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின முதல்வர் ஹேமந்த் சோரனை பாஜக சிறையில் அடைத்துள்ளது. அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.