"மோடியைத் தவிர வேறொருவர் பிரதமரானால் நாடு சின்னாபின்னமாகிவிடும்" - பரப்புரையில் அண்ணாமலை பேச்சு!
"மோடியைத் தவிர வேறோருவர் பிரதமரானால் நாடு சின்னாபின்னமாகிவிடும்" என கோவையில் பாஜக மாநிலத் தலைவரும் கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பரப்புரையில் பேசியுள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள் நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : வான்கடே மைதானத்தில் MSD அடித்த 3சிக்ஸர்களும்… 3சாதனைகளும்!
மேலும் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக கூறி அண்ணாமலை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு 10.30 மணிக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், அவர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் இது இரண்டாவது வழக்காகும்.
” இந்தியா கூட்டணி தலைவர்களே இல்லாத ஒரு கூட்டணி. பத்து செம்மறி ஆடுகள் ஒன்று சேர்ந்து விட்டாலே தங்களுக்குள் தலைவர்களை அவை தேர்வு செய்துவிடும். ஆனால் இந்தியா கூட்டணியினரால் அப்படி ஒற்றைத் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை. மோடியை தவிர வேறு யாராவது பிரதமரானால் என்ன ஆகும் என சிந்தித்து பாருங்கள். அவர்கள் நம் நாட்டை சின்னாபின்னமாக்கி விடுவார்கள்.
மின்வெட்டை ஏற்படுத்தி தேர்தலுக்கு ரூ.1000, மற்றும் ரூ.500 என பணம் தருகிறார்கள். இந்த அவல நிலையில் ஆளும் கட்சி உள்ளது. பாஜக உள்ளே வர வேண்டிய தருணம் வந்து விட்டது. தாமரையை மலர செய்ய வேண்டும் உங்கள் குரலாக அண்ணாமலை இருக்க வேண்டும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.