Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மக்களை அவதிக்குள்ளாக்கினால் சென்னை முழுவதும் போராட்டம் வெடிக்கும்” - அண்ணாமலை எச்சரிக்கை!

01:10 PM Feb 10, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை முழுமையாக முடிக்காமல், மக்களை அவதிக்கு உள்ளாக்கினால் சென்னை முழுக்க போராட்டம் வெடிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். 

Advertisement

சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்,  தாம்பரம் அருகே புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.  வார இறுதி நாட்களில் மட்டும் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் இன்று அதிகாலை வரை காத்திருந்தனர்.  கொந்தளித்த ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் ஜிஎஸ்டி சாலையில் வந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால் ஜீஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  பல்வேறு பயணிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீஸாருக்கும் பயணிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மக்களை அவதிக்கு ஆளாக்கினால் சென்னை முழுவதும் கலவரம் வெடிக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாகத் தயாராகும் வரை, பேருந்துகளை மீண்டும் கோயம்பேட்டில் இருந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.  அதை விட்டுவிட்டு, பொதுமக்களைத் தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால்,  நேற்றைய பொதுமக்களின் போராட்டம்,  சென்னை முழுக்க மிகப் பெருமளவில் வெடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
AnnamalaiBJPDMKKilambakkam Bus StandProtest
Advertisement
Next Article