For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி..!

01:01 PM Jan 25, 2024 IST | Web Editor
பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன    மத்திய இணையமைச்சர் எல் முருகன் கேள்வி
Advertisement

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

“பல்லடம் நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையை தொடர்பு கொண்ட போது காவலர் ஒருவர் ஸ்டேஷன்ல ஆள் இல்லை.. பாதுகாப்பு வேணும்னா நீங்களே ஸ்டேஷன் வருமாறு கூறியிருக்கிறார். ஒரு காவலர் இப்படி பேசலாமா. அதுவும் ஒரு செய்தியாளர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லியும் இப்படி செய்ததின் உள்நோக்கம் என்ன? திராவிட மாடல் அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும்?

இதையும் படியுங்கள் : செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் - நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

செய்தியாளர் நேசபிரபு மீது கொடூர கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன். பத்திரிகையாளர் சகோதரருக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும் அவருக்கான இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement