For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இல்லாமல் போய்விடும்" - கனிமொழி எம்பி பேச்சு

09:54 AM Feb 06, 2024 IST | Web Editor
 பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இல்லாமல் போய்விடும்    கனிமொழி எம்பி பேச்சு
Advertisement

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்ற நிலையே இல்லாமல்
போய்விடும் என்று கனிமொழி எம்.பி கடுமை சாடியுள்ளார். 

Advertisement

தூத்துக்குடி மாவட்டம்,  திருச்செந்தூர் அருகே உடன்குடியில் நாடாளுமன்ற
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 'I.N.D.I.A. கூட்டணி வெல்வது நிச்சயம்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டம் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்தில் I.N.D.I.A. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள் : “பிரதமர் மோடி ஆட்சியின் மோசமான இருண்ட பக்கங்கள் குறித்து குடியரசு தலைவர் உரையில் ஒன்றுமே இல்லை!” – எம்.பி. கனிமொழி சோமு குற்றச்சாட்டு!

திமுக துணை பொதுச்செயலாளரும்,  தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,  சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  விசிக சட்டமன்ற உறுப்பினர் ஷா நவாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு I.N.D.I.A. கூட்டணியை ஆதரித்து உரையாற்றினர்.

பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A. கூட்டணியை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்து போவார்கள்.  மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் I.N.D.I.A. கூட்டணியை எவராலும் வெல்ல முடியாது என்ற வரலாறை படைப்போம்.  தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசம் குறையாமல் வெற்றி பெறுவோம்"

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது:

"இந்தியா என்ற ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கடைசி கால கட்டம் இது. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்று கேட்கும் தேர்தல்
இந்த தேர்தல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இந்த தேர்தல் என்ற சூழ்நிலை உருவாகும்.  தென் மாநிலங்களை காலனி மாநிலமாக ஆக்கும் சதி நடக்கிறது"

இதையும் படியுங்கள் : திருப்பதியில் படப்பிடிப்பு நிறைவு - கோவா செல்லும் தனுஷ் 51 படக்குழு..!

பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் இல்லையென்றால், இந்த இந்தியா என்பது
இல்லாமல் போய்விடும். மேலும், இந்த நாட்டில் யாருமே பாஜகவினரை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது.  இதையடுத்து,  யாரிடமும் கலந்து ஆலாசிக்காமலே விவசாயிக்கு எதிரான சட்டங்களை இயற்றுகின்றனர்.  மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்காலர்ஷிப் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

"இந்த ஆட்சி மீண்டும் வந்தால் மறுபடியும் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள்.  பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜயம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு ராம ராஜ்யம்,  அது மோடி ராஜ்யம்.  தமிழ்நாட்டில் இருக்கும் நமது கனவு என்பது ராமசாமி ராஜ்யம்,  ஈவே ராமசாமி ராஜ்யம் அந்த ராஜ்யத்தை நாடு முழுவதும் உருவாக்கி காட்டுவோம். அதுவே இந்தியாவின் வெற்றி"

இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.

Tags :
Advertisement