இட்லி கடை திரைப்படம் : பாராட்டிய அண்ணாமலை.., நன்றி சொன்ன தனுஷ்..!
தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் தனுஷ். கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை தனது நடிப்பு திறமையால் தடம் பதித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் இட்லி கடை. இப்படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பார்த்திபன்,சத்யராஜ், ராஜ்கிரண், ஷலினி பாண்டே, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நல்ல ஃபீல் குட் படமாக வெளிவந்திருக்க கூடிய இட்லி கடை படத்தை ரசிகர்கள் தாண்டி அரசியல்வாதிகளும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இட்லி கடைப படத்தை பார்த்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் தனுஷை வாழ்த்தி இருந்தார். அந்த வாழ்த்தில், எந்த விதமான வன்முறைக் காட்சிகள் இல்லாமல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் மனநிறைவாகக் கண்டுகளிக்கும் படத்தை அளித்திருக்கிறீர்கள் என்று பாராட்டியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் அண்ணமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மதிப்பிற்குரிய அண்ணாமலை சார், எங்கள் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. உங்களின் அன்பான வார்த்தைகள், பாராட்டு மற்றும் ஊக்கத்திற்கு நானும் எனது குழுவினரும் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்”
என்று தெரிவித்துள்ளார்.