‘நீதி வேண்டும்’ - வைரலாகும் இட்லி ஐஸ்கிரீம்..
சாலையோர வியாபாரி ஒருவர் இட்லி ஐஸ்கிரீம் தயாரிக்கும் வீடியோ வைரலான நிலையில் ‘இட்லிக்கு நீதி வேண்டும்’, ‘இது சட்ட விரோதமானது’ என நகைச்சுவையாக பல கருத்துகளை பார்வையாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம் அனைவராலும் விரும்பப்படும் ஒரு டெசர்ட் ஆகும். உணவு பிரியர்களிடம் குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம்க்கு என்று தனி இடமும் உண்டு. இந்நிலையில், சமீபகாலமாக குலோப் ஜாமுன் பர்கர், குலோப் ஜாமுன் சமோசா, ஐஸ்கிரீம் மசாலா தோசை, ஐஸ்கிரீம் நூடுல்ஸ் என்ற விநோதமான உணவு கலவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில், தற்போது சாலையோர வியாபாரி ஒருவர் இட்லி ஐஸ்கிரீம் தயாரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இட்லி, சாம்பார், இரண்டு வகை சட்னி, ஐஸ்கிரீம் ஆகியவற்றை கொண்டு இதை தயாரிக்கின்றனர். இதற்கு பார்வையாளர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு சிலர் பதிவிட்டுள்ளதாவது;
தயவு செய்து இட்லியை விட்டுவிடுங்கள், இதைப் பார்த்தால் வாந்தி வருகிறது, இட்லிக்கு நீதி வேண்டும், இது சட்டவிரோதமானது என அனைவரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஜனவரி 17 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை தாண்டி, தற்போது வைரலாகி வருகிறது.