ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் - தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு!
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கு பெறும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
நேற்று முதல் அணியாக நியூசிலாந்து அணி தங்களது அணியை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று இங்கிலாந்து அணியும் தங்களது அணியை அறிவித்தது. மேலும் பிசிசிஐ டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. அதன்படி கேப்டனாக ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட 15பேர் கொண்ட அணியை அறிவித்தது.
இந்த நிலையில் உலகக் கோப்பையில் பங்கேற்கும் மார்கரம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் :
அய்டன் மார்கரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்