Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஜூன் 2ம் தேதி சரணடைவேன்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

12:29 PM May 31, 2024 IST | Web Editor
Advertisement

"ஜூன் 2ம் தேதி சரணடைவேன்" என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1  வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.  மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஜூன் 1ம் தேதியுட கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில்,  டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி நேற்று மனுத்தாக்கல் செய்தார் .  இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு ஜூன் 1ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது..

” ஜூன் 2ம் தேதி சரண் அடைவேன் . எனக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெறும் சமயங்களில் டெல்லி மக்கள் தனக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு பாஜகவின் ஒரு தலைப்பட்சமான அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் .

நான் சிறையில் இருந்தாலும் டெல்லி மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகள் நிறுத்தப்படாது டெல்லி ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் ”  என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags :
Arvind Kejriwalbail pleaBail Plea RejectedCMDelhiDelhi CMDelhi CM KejriwalKejriwal
Advertisement
Next Article