For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்” - நடிகர் பாலா!

05:18 PM Jun 15, 2024 IST | Web Editor
“விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்”   நடிகர் பாலா
Advertisement

தவெக தலைவர் விஜய் தன்னை அரசியலுக்கு அழைத்தாலும் அரசியலுக்குள் வரமாட்டேன் என நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அடுக்குமாடி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சின்னத்திரை பிரபலம் KPY பாலா கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாலா, தனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் அரசியலில் இறங்க மாட்டேன் எனவும், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அழைத்தாலும் நிச்சயம் அரசியலில் இறங்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். தான் தற்போது கூடுதலாக உழைத்து வருவதாகவும், அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே பிறருக்கு உதவி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமணத்திற்கு பிறகும் மக்கள் பணி தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே நடிகர் ராகவா லாரன்ஸும், பாலாவும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாலா.

Tags :
Advertisement