For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்” - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!

02:39 PM Jun 10, 2024 IST | Web Editor
“மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்”    மத்திய இணையமைச்சர் எல் முருகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
Advertisement

2வது முறை மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள எல்.முருகன் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

தொடர்ச்சியாக 3-வது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.  அவருடன் பாஜக மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங்,  அமித் ஷா,  நிதின் கட்கரி,  பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா,  நிர்மலா சீதாராமன் உள்பட 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடிக்கும்,  அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமணமும்,  ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடி அமைச்சரவையில் நரேந்திர மோடியுடன் 30 கேபினட் அமைச்சர்கள்,  5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள்,  36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  இதில் தமிழ்நாடு,  கர்நாடகா,  ஆந்திரா,  கேரளா, தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 13 பேர் பதவியேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,  மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், எல்.முருகனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.  அவர் 2 முறையாக இணையமைச்சராக பதவியேற்றுள்ளார்.  தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில்,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் டெல்லியில் நமது முதன்மை செய்தியாளர் டார்வினுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.  அப்போது அவர், “ பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியில்,  தமிழர் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரமரின் இந்த வளர்ச்சியடைந்த பாரதத்தில் பங்கு பெறுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடுவேன்” என தெரிவித்தார்.

இந்த செய்தியை காணொளி வடிவில் காண: