Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போன்ற சாலைகளை அமைப்பேன் - பாஜக வேட்பாளரின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி!

03:18 PM Jan 05, 2025 IST | Web Editor
Advertisement

பாஜக எம்எல்ஏ வேட்பாளர் ரமேஷ் பிதுரி தேர்தலில் வெற்றிப்பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்ற சாலைகளை அமைத்து தருவேன் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டெல்லியில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆம் ஆத்மியும், பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது,

“பீகார் மாநில சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று லாலு உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதிகலிலுள்ள சாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்" எனப் பேசியிருந்தார்.

பாஜக வேட்பாளரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ், பிதுரி மட்டுமின்றி பாஜகவின் உயர்மட்ட தலைமையும் இதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்துள்ளது.

“பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி. பிதுரியின் கருத்து வெட்கக்கேடானது. இது பெண்கள் விஷயத்தில் அவரது அசிங்கமான மனநிலையை பிரதிபலிக்கிறது. இதுவே பாஜகவின் உண்மையான முகம்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் தெரிவித்துள்ளார்.

“இவர், பாஜக வேட்பாளர். இவரின் பேச்சை கேளுங்கள். இதுவே பெண்களுக்கு பாஜக கொடுக்கும் மரியாதை. டெல்லி பெண்களின் மரியாதை இதுபோன்றவர்களின் கையில் பாதுகாப்பாக இருக்குமா? என மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரமேஷ் பிதுரிக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “இந்த தவறான நடத்தை ரமேஷ் பிதுரி என்ற மலிவான மனிதனின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருடைய உரிமையாளர்களின் யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய கீழ்த்தரமான தலைவர்களின் மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மதிப்பினை நீங்கள் கண்டுகொள்ளலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
BJP leaderCheeksCongresspriyanka gandhiRamesh Bidhuri'roads
Advertisement
Next Article