Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய மு.கருணாநிதியின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

06:39 PM Jun 24, 2024 IST | Web Editor
Advertisement

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் தேரோட்டம், திமுக அரசின் முயற்சிகளால் சிறப்புடன் நடைபெற்றதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இங்கு தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை மூலம், இக்கோயிலில் தேரோட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, ஏராளமான மக்கள் பங்கேற்று அமைதியான முறையில் தேரோட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தேரோட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதை அடுத்து கோயில் நிர்வாகத்தினர் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,

18 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம், நமது திமுக அரசின் முயற்சிகளால் அனைத்து மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்புடன் நடைபெற்றது. இதற்காக அந்தப் பகுதி மக்கள் இன்று என்னைச் சந்தித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு நன்றி தெரிவித்தனர். ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய தலைவர் கலைஞரின் மகனாகப் பெருமிதம் கொண்டேன்!” என பதிவிட்டுள்ளார்.

Tags :
CMO TamilNaduDMKMK StalinNews7Tamilnews7TamilUpdatessivagangaTN Govt
Advertisement
Next Article