For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பாஜகவிடம் அதிமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” - திருமாவளவன் எம்பி!

09:51 AM Feb 28, 2024 IST | Web Editor
“பாஜகவிடம் அதிமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”   திருமாவளவன் எம்பி
Advertisement

“தோழமை கட்சி என்ற முறையில் சொல்கிறேன், பாஜகவிடம் அதிமுக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிடி அரங்கில் வன்னி அரசு எழுதிய ‘மோடி ஆட்சி
இருண்ட காலத்தின் சாட்சி’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி,  தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ,  பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மோடி ஆட்சி இருண்ட காலத்தின் சாட்சி என்ற நூலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் திருமாவளவன் எம்பி,  கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டனர்.  நூல் வெளியீட்டிற்கு பிறகு திருமாவளவன் நிகழ்ச்சியில் பேசியதாவது;

900-க்கும் மேற்பட்டோர் பாடல்கள் இருக்கின்ற ஒரு இயக்கம் என்றால் அப்படி ஒரு
இயக்கம் நம் இயக்கம் தான். அந்த பாடலுக்கு சொந்தக்காரர் வன்னி அரசு தான்.  அரசியல் களத்தில் என்னை உட்பட எல்லாரையும் சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர் தான் வன்னி அரசு. புலிகளோடு எங்களுக்கு இருந்த தொடர்பு இன்றைக்கு யாருக்கும் தெரியாது. அது
எனக்கும், பிரபாகரனுக்கும், வன்னி அரசுக்கும் மட்டும் தான் தெரியும்.

பல்வேறு மாறுபட்ட கருத்துகள் வன்னி அரசுக்கு இருந்தாலும் நம் இயக்கம் விடுதலை
சிறுத்தைகள் தான் என தொடர்ந்து இயக்கத்தில் இருந்து வருபவர் வன்னி அரசு.  எல்லா நேரங்களிலும் கட்சிக்கு ஒரு இணைப்பு பாலமாக இருந்து வருகிறார்.  அரியலூரில் திருமாவளவன் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள்.  திருமாவளவன்
எங்கு இருக்கிறார் என எல்லாருக்கும் தெரியும்.

ரவிக்குமார் எம்.பி.யை காணவில்லை என போஸ்டர் ஒட்டுகிறார்கள். அவர் 24 மணி நேரமும் தொகுதியில் தான் இருக்கிறார்.  காங்கிரஸ் கட்சியில் எனக்கு பல்வேறு முரண்பாடு இருக்கிறது.  ஆனால், இன்றைக்கு காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறேன் என்றால் ஒரு பாசிச பாஜக அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான். EVM தென் இந்தியாவில் இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

அதிமுகவை பாஜக பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர் பற்றி பல்லடத்தில் மோடி பேசி இருக்கிறார்.  திமுக பலமாக இருக்கும் கட்சி என்பதால் பாஜகவால் நெருங்க முடியவில்லை.  அதிமுகவை நெருங்க முயற்சி செய்கிறது.  தோழமை கட்சி என்ற முறையில் சொல்கிறேன்.  ஜாக்கிரதையாக இருங்கள். ” எனக் கூறியுள்ளார்.

Tags :
Advertisement